/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடை ஜன்னலை உடைத்து பருப்பை ருசி பார்த்த காட்டு யானை
/
ரேஷன் கடை ஜன்னலை உடைத்து பருப்பை ருசி பார்த்த காட்டு யானை
ரேஷன் கடை ஜன்னலை உடைத்து பருப்பை ருசி பார்த்த காட்டு யானை
ரேஷன் கடை ஜன்னலை உடைத்து பருப்பை ருசி பார்த்த காட்டு யானை
ADDED : செப் 05, 2025 10:24 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே ரேஷன் கடை ஜன்னலை உடைத்த ஆண் யானை, உள்ளே இருந்த பருப்பு மூட்டையை வெளியே எடுத்து சாப்பிட்டு, விவசாய நிலத்தைசேதம் செய்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில் ரேஷன் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஆண் யானை, ரேஷன் கடை இரும்பு கேட்டை உடைக்க முயற்சி செய்தது. முடியாத நிலையில் பின் பக்கம் சென்று, ஜன்னலை தனது தந்தத்தால் குத்தி திறந்துள்ளது.
பின்பு தும்பிக்கையை ஜன்னல் வழியாக உள்ளே விட்டு, பருப்பு மூட்டையை வெளியே இழுத்து போட்டு சாப்பிட்டது. பின்பு சேதமடைந்த பருப்பு முட்டையை வயல் வழியாக இழுத்துச் சென்றது. இதனால் வயலில் நீண்ட தூரம் பருப்பு சிதறி உள்ளது. இதுகுறித்து ஊமப்பாளையம் பொதுமக்கள் கூறுகையில்,' ரேஷன் பருப்பு மற்றும் அரிசியை சாப்பிட்டு பழகிய யானை, தொடர்ச்சியாக ரேஷன் கடைக்கு வந்து மீண்டும் அரிசி பருப்பை சாப்பிட முயற்சி செய்கிறது.
எனவே வனத்துறையினர் யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.