/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானைகள் முகாம்; பெட்டிக்கடை சூறை
/
காட்டு யானைகள் முகாம்; பெட்டிக்கடை சூறை
ADDED : ஆக 11, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக அய்யர்பாடி, கருமலை, வாகமலை, முத்துமுடி, வில்லோனி, வெள்ளமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், சோலைப்பாடி என்ற பகுதிக்கு நள்ளிரவு, 12:00 மணிக்கு கூட்டமாக சென்றன. அங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் வாழைகளை உட்கொண்டது.
அதன்பின், பாக்கியசாமி என்பவரின் பெட்டிக்கடையை உடைத்து பொருட்களை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. நள்ளிரவு நேரம் என்பதாலும், மழை பெய்ததாலும் யானைகளை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.