/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
4 நாட்களாக ஒரே தோட்டத்தை சேதப்படுத்தியது காட்டு யானை
/
4 நாட்களாக ஒரே தோட்டத்தை சேதப்படுத்தியது காட்டு யானை
4 நாட்களாக ஒரே தோட்டத்தை சேதப்படுத்தியது காட்டு யானை
4 நாட்களாக ஒரே தோட்டத்தை சேதப்படுத்தியது காட்டு யானை
ADDED : அக் 07, 2025 11:33 PM

தொண்டாமுத்துார்; தேவராயபுரம், இச்சுக்குழி பகுதியில், தொடர்ந்து நான்கு நாட்களாக, ஒற்றைக் காட்டு யானை, ஒரே தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளதால், வனத்துறையினர் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொண்டாமுத்துார் வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் தினமும் காட்டு யானைகள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
தேவராயபுரம், இச்சுக்குழி பகுதியில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில், 4ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களாக, ஒற்றைக்காட்டு யானை புகுந்து, வாழை மரங்களை சேதப்படுத்தி, வாழைத்தண்டுகளை உண்டு செல்கிறது. வாழை தார்கள், 10 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளன.
ஒற்றைக் காட்டு யானை, வாழை மரங்களை முழுவதுமாக சேதப்படுத்தியுள்ளதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களாக தொடர்ந்து ஒரே தோட்டத்துக்குள் புகுந்து யானை சேதப்படுத்தி வருவதை, வனத்துறையினர் கட்டுப்படுத்தாமல் உள்ளதால், வனத்துறையினர் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.