/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகவான் நாமத்தை சொன்னவுடன் வானத்தில் இருந்து வந்த சேலைகள்!
/
பகவான் நாமத்தை சொன்னவுடன் வானத்தில் இருந்து வந்த சேலைகள்!
பகவான் நாமத்தை சொன்னவுடன் வானத்தில் இருந்து வந்த சேலைகள்!
பகவான் நாமத்தை சொன்னவுடன் வானத்தில் இருந்து வந்த சேலைகள்!
ADDED : அக் 07, 2025 11:34 PM

கோவை; கோவையில் ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் உள்ள பாரதீய வித்யா பவனில், சங்கீத உபன்யாசம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், பங்கேற்ற கலைமாமணி ஸ்ரீமதி விவசாகா ஹரி 'மகாபாரதம்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நிகழ்த்தினர்.
அவர் பேசியதாவது:
நமது இதிகாசங்களில் மிக முக்கியமானது மகாபாரதம். மனித வாழ்வில் நிகழும் இன்பம், துன்பம், நாடு, நகரம் வெற்றி தோல்வி என, அனைத்தையும் சித்தரிக்கும் காவியமாக விளங்குகிறது.
ஒருநாள் தர்மர் உறங்கும் போது, ஒரு கனவு தோன்றியது. அதில் சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.
அப்போது அவர், 'சர்வ நாசத்துக்கும் காரணம் நீயாய் இருப்பாய்' என்று சொல்ல, கனவு கலைந்து விடுகிறது. தர்மர் கலங்கி விடுகிறார். இதை அறிந்த வியாசர், தர்மனிடம் ''விதியையும், தெய்வ சங்கல்பத்தையும் யாரும் மாற்ற முடியாது.
இது உனக்கு முன் கூட்டியே தெரிந்தது என்பதற்கு நீ சந்தோஷப்பட வேண்டும்' என்கிறார்.
இதை தொடர்ந்துதான், சகுனியால் சூதாட்டம் என்ற சதி வலை விரிக்கப்படுகிறது. இதில் துரியோதணன் திட்டப்படி சூதாட்டத்தில் தர்மரை விழ வைக்கின்றனர். சூது புதை மணல் போன்றது அதில் சிக்கியவர்கள் மீள முடியாது.
சூதில் சிக்கிய தர்மன் தன் நாடு, நகரம், உடமை, உறவுகள் அனைத்தையும் இழக்கிறார். இறுதியாக தனது மனைவியான திரவுபதியையும் இழக்கிறார்.தர்மன் செய்த தவறால், எந்த தவறும் செய்யாத திரவுபதி சபையில் அவமதிக்கப்படுகிறாள்.
அரச சபையில் கூடியிருந்த அத்தனை பேரிடம் கெஞ்சியும், கதறியும் அவளது மானத்தை காக்க யாரும் வரவில்லை. இறுதியாக, 'கோவிந்தா' என்று கிருஷ்ண பராமாத்மாவை அழைக்கிறாள். பகவானின் நாமத்தை உச்சரித்தவுடன், வண்ண வண்ண சேலைகள் வானத்தில் இருந்து வந்து திரவுபதியின் மானம் காக்கிறது.
மகாபாரத்தில் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் இறுதியில் தர்மம் வென்றது.
இவ்வாறு, அவர் பேசினார்.