நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வனச்சரகம், கோட்டூர் பிரிவு, பருத்தியூர் சுற்றுக்குட்பட்ட ஊமாண்டி வனப் பகுதிக்குள், வனத்துறை களப்பணியாளர்கள் காலை ரோந்து பணி சென்றனர்.
அப்போது, வயது முதிர்ந்த பெண் காட்டு யானை நடக்க இயலாமல் படுத்திருப்பதை கண்டறிந்து, அதனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். ஆனால், மதியம், 1:30 மணிக்கு யானை இறந்தது.
இதையடுத்து, வனக்கால்நடை அலுவலர்கள், கம்பாலபட்டி, கோட்டூர் அரசு உதவி கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் முன்னிலையில், மாலை, 4:15 மணிக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

