ADDED : மே 09, 2026 02:03 AM

அ நிறம் | அளவு
தொண்டாமுத்துார்: கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட மோளப்பாளையம், மூலக்காடு பகுதியில் வன எல்லையையொட்டி, தனியார் பட்டா நிலத்தில், நேற்று காலை, 25 வயது ஆண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், மின்வாரியத்தால், 20 அடி உயர மின்கம்பத்தில், 10 அடி உயரத்தில் பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மரில் உள்ள உயர் அழுத்த கம்பியில், காட்டு யானையின் தும்பிக்கை பட்டுள்ளது. இதில், உயரழுத்த மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்தது தெரிந்தது.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். வனகால்நடை டாக்டர் குழுவினர், யானை உடலை கூராய்வு செய்து, வனப்பகுதியில் புதைத்தனர்.
