/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட காட்டு யானைகள்
/
தொழிலாளர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட காட்டு யானைகள்
தொழிலாளர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட காட்டு யானைகள்
தொழிலாளர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட காட்டு யானைகள்
ADDED : பிப் 19, 2025 01:00 AM

வால்பாறை:தேயிலை எஸ்டேட்டிற்குள் புகுந்த யானைகளை, தொழிலாளர்கள் அன்பாக பேசி வனப்பகுதிக்குள் அனுப்பிய வீடியோ பரவி வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி ஸ்ரீராம் எஸ்டேட் ஒன்றாம் நம்பர் தேயிலை காட்டில், நேற்று காலை, 40 தொழிலாளர்கள் தேயிலை பறிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, குட்டியுடன் அங்கு வந்த மூன்று யானைகளை கண்ட தொழிலாளர்கள், பணியை பாதியில் நிறுத்தினர்.
தொழிலாளர்கள், யானைகளை பார்த்து, 'சாமி அப்படியே காட்டுக்கு போயிடுங்கப்பா... நாங்க வேலை செய்யணும்.... உங்கள நாங்க ஒண்ணும் பண்ண மாட்டோம்; நீங்க குட்டிய கூட்டிட்டு அமைதியா காட்டுக்குள்ள போயிருங்க...' என, பேசினர்.
தொழிலாளர்கள் கெஞ்சியதைக் கேட்ட யானைகள், எந்த தொந்தரவும் செய்யாமல் வனப்பகுதிக்குள் சென்றன. பின், தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இப்போது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

