தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீட்டு கேட்டை உடைத்த காட்டு யானைகள்

வீட்டு கேட்டை உடைத்த காட்டு யானைகள்

வீட்டு கேட்டை உடைத்த காட்டு யானைகள்


ADDED : மே 06, 2025 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே காளையனூரில் வீட்டின் கேட்டை காட்டு யானைகள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தினசரி அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆனாலும், வனவிலங்குகள் குறிப்பாக, காட்டு யானைகள் தோட்டத்து வீடுகளை குறிவைத்து நடமாடி வருகின்றன.

தோட்டப்பகுதியில் உள்ள தென்னை, வாழை உள்ளிட்ட காய்கறி பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. சின்னதடாகம் அருகே காளையனுர் பெருமாள்சாமி வீட்டின் முன்புறம் இருந்த கேட்டை பிடித்து இழுத்து கீழே தள்ளி சேதப்படுத்தியது. சிறிது நேரம் அதே பகுதியில் சுற்றி வந்த யானைகள், மலையடிவாரம் நோக்கி சென்றன.

சின்னதடாகம், காளையனூர், நஞ்சுண்டாபுரம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால், தோட்டத்து பகுதிகள் மற்றும் மலையோர கிராமங்களில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us