/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
/
தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
ADDED : ஜன 18, 2024 01:31 AM
பெ.நா.பாளையம் : கோவனூர், நாயக்கன்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள வெங்கடேசன், சுப்பிரமணியம் ஆகியோரது தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்கு உள்ள, 10 ஆண்டுகளான தென்னை மரங்களை கீழே தள்ளி சாய்த்தன. மேலும் தென்னை மரத்தின் குருத்துக்களை பிடுங்கி எறிந்தன.
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், 'ஒரே இரவில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், நன்கு வளர்ந்து உள்ள தென்னை மரங்களின் குருத்துக்களை பிடுங்கி எறிந்து விட்டன. இதனால் மரங்கள் அடியோடு நாசமானது.
காட்டு யானைகளின் பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்றே தெரியவில்லை' என்றனர்.