/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்கு சட்டங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வனவிலங்கு சட்டங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 08, 2026 05:04 AM
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் மாநில வனச்சேவைக்கான மத்திய பயிற்சி நிறுவனம், சலீம் அலி பறவைகள் மையம், மாநில வனத்துறை சார்பில் வனவிலங்குகள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் எனும் தலைப்பில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வனவிலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அவற்றுடன் இணைந்து இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் தலைமை வகித்தார். மாநில வனச் சேவை காண மத்திய பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் வித்யாசாகர், விமான நிலைய மேலாளர்(செயலாக்கம்) கோபால், முன்னாள் வனக்கால்நடை டாக்டர் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

