/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம்
/
மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம்
ADDED : ஜன 28, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லுார் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என காரமடை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், இச்சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே செல்வதால், வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
4 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில் வனத்துறையினர் இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர், என்றனர்.--