/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன உயிரின வார விழா சைக்கிள் பேரணி
/
வன உயிரின வார விழா சைக்கிள் பேரணி
ADDED : அக் 04, 2024 12:22 AM

கோவை : வன உயிரின வார விழாவையொட்டி சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கோவை வனக்கோட்டம் சார்பில், வன உயிரின வார விழாவையொட்டி தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில் சைக்கிள் பேரணி, கைரேகை இயக்கம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கோவை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமை வகித்தார்.
விழாவில், முதன்மை வன பாதுகாவலர் செந்தில்குமார், துணை இயக்குனர் (ஜி.எஸ்.டி.,) பிரபாகரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வன உயர் பயிற்சியக வளாகத்தில் சைக்கிள் பேரணி துவங்கி, தடாகம் ரோடு, காந்தி பார்க், டி.பி.,ரோடு, ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகம், மேட்டுப்பாளையம் ரோடு வழியாக வன மரபியல் நிறுவனத்தில் நிறைவடைந்தது.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள், கோவை வனக்கோட்டத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் கோவை வனக்கோட்டத்தின் சார்பாக பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.