/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன விலங்கு வாரம் சிறப்பு சொற்பொழிவு
/
வன விலங்கு வாரம் சிறப்பு சொற்பொழிவு
ADDED : அக் 11, 2025 10:27 PM
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையி வேளாண்மை பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை ஈகோ கிளப்' சார்பில், உலக வன விலங்கு வாரத்தையொட்டி, வன விலங்கு' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது.
வேளாண் பொறியியல் கல்லுாரி முதல்வர் ரவிராஜ் தலைமை வகித்து, மாணவர்கள் இயற்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், இயற்கையுடனும், மனிதனுடனும் சமநிலை பேணப்படும்போது மட்டுமே நிலைத்த வளர்ச்சி சாத்தியம் எனவும் வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வனச்சரக அலுவலர்கள் நிர்மலா, ரங்கநாதன் ஆகியோர், தங்கள் துறையில் பெற்ற அனுபவங்கள், வன விலங்கு பாதுகாப்பில் எதிர்நீச்சல்கள் மற்றும் மனிதன் வன விலங்கு இணக்க வாழ்வு குறித்து பகிர்ந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு வன விலங்கு பாதுகாப்பு, காடுகளின் முக்கியத்துவம் மற்றும் உயிர் பல்வகையை பேணுவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.