ADDED : மே 29, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு, ; பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே ஏழூர் பிரிவு பஸ் ஸ்டாப்பில், தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் காத்திருக்கின்றனர். இப்பகுதியில், பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் இருப்பதால் அதிகளவு மக்கள் பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர்.
இங்கு நிழற்கூரை இல்லாததால், மக்கள் மழை காலத்தில் நனைந்தபடியும், வெயில் காலத்திலும் அவதிப்படுகின்றனர். தற்போது பருவமழை பெய்யும் நிலையில், அடுத்த வாரம் முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அப்போது, மாணவர்கள் மழையில் நனைத்து அவதிப்படுவர்.
இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் பயணியர் நிழற்கூரை அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர்.