/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்மிக தல பஸ் சேவை கோவையில் துவங்குமா?
/
ஆன்மிக தல பஸ் சேவை கோவையில் துவங்குமா?
ADDED : நவ 11, 2024 05:08 AM

கோவை : ''கும்பகோணம் மண்டலத்தை போன்று, கோவையிலும் ஆன்மிக தலங்களுக்கான பஸ் சேவையை துவங்க வேண்டும்'' என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், எண்கண் சுப்ரமணிய சுவாமி; நாகை மாவட்டம், சிக்கல் சிங்கார வேலன், பொரவாச்சேரி ஸ்ரீ கந்தசாமி, எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி; தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி, ஏரகரம் ஆதிசுவாமிநாத சுவாமி ஆகிய ஆறு முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையிலான சுற்றுலா சிறப்பு பஸ், அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு பயணிக்கு கட்டணம் 650 ரூபாய். இதற்கு பக்தர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
''கோவை மாவட்டம், மருதமலை முருகன், பேரூர் பட்டீஸ்வரர், அனுவாவி சுப்ரமணிய சுவாமி, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன், காரமடை அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன்; திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில்; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன், ஈரோடு, சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ளன. கும்பகோணம் மண்டலத்தைப் பின்பற்றி கோவை மண்டலம், ஈரோடு மண்டலத்தில் இருந்து ஆன்மிக தல சுற்றுலா சிறப்பு பஸ் இயக்கத்தை துவங்க வேண்டும்'' என்கின்றனர் பக்தர்கள்.