/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல்லை -- மேட்டுப்பாளையம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?
/
நெல்லை -- மேட்டுப்பாளையம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?
நெல்லை -- மேட்டுப்பாளையம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?
நெல்லை -- மேட்டுப்பாளையம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?
ADDED : பிப் 10, 2025 10:46 PM
கிணத்துக்கடவு; திருநெல்வேலி (நெல்லை) - - மேட்டுப்பாளையம் இடையே, மீண்டும் ரயில் இயக்க பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி (நெல்லை) - - மேட்டுப்பாளையம் ரயில் (06030) வாரம் ஒரு முறை கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தது. இதில், திருநெல்வேலியில் இருந்து, ஞாயிறு இரவு 7:00 மணிக்கு கிளம்பி, திங்கள் காலை 7:00 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.
இதே போல், மேட்டுப்பாளையம் --- திருநெல்வேலி (06029) ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, திங்கள் இரவு 7:45 மணிக்கு கிளம்பி, செவ்வாய் காலை 7:30 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும். இந்த ரயிலை பயணியர் பலர் பயன்படுத்தி வந்தனர். மேலும், பண்டிகை நாட்களில் இந்த ரயிலில் அதிகப்படியான நபர்கள் சென்று வந்தனர். தற்போது, இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பயணியர் கூறுகையில், 'திருநெல்வேலி (நெல்லை) - - மேட்டுப்பாளையம் ரயில், கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்பட்டது. வார இறுதி நாட்களில், இந்த ரயில் சேவையை பயணியர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது இந்த சேவை பிப்ரவரி முதல் வாரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில், இந்த ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும்,' என்றனர்.