/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு இன்று சத்துணவு கிடைக்குமா?
/
மாணவர்களுக்கு இன்று சத்துணவு கிடைக்குமா?
ADDED : ஜன 20, 2026 05:01 AM
கோவை: காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று முதல் சத்துணவு மையங்களை மூடிவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 35 ஆயிரம் மாணவர்கள், சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பால், மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிப்பில், சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சத்துணவு அமைப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இருப்பினும், சமையலர், உதவியாளர்கள் மூலம் பணிகள் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உணவு தடைபடாமல் வழங்கப்படும்' என்றார்.
இருந்தபோதிலும், இன்று தங்கள் குழந்தைகளுக்கு உணவு தயாரித்து கொடுத்து விட வேண்டியது பெற்றோரின் கடமை.

