/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடல் புற்றுநோய் கண்டறியும் திட்டம் திருப்பூரில் வருமா?
/
குடல் புற்றுநோய் கண்டறியும் திட்டம் திருப்பூரில் வருமா?
குடல் புற்றுநோய் கண்டறியும் திட்டம் திருப்பூரில் வருமா?
குடல் புற்றுநோய் கண்டறியும் திட்டம் திருப்பூரில் வருமா?
ADDED : ஏப் 01, 2025 10:09 PM
- நமது நிருபர் -
பெருங்குடல், மலக்குடல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திட்டம், 2004 முதல் செயல்பாட்டில் உள்ளது. மாநிலத்தில், கோவை மாவட்டத்தில், குடல்புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கோவையுடன் ஒப்பிடுகையில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள மேற்கு மண்டல மாவட்டங்களில் ஒன்றான, திருப்பூர் மாவட்டத்திலும் தொற்றா நோய் சிகிச்சை திட்டத்தின் கீழ், குடல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திட்டம் கொண்டு வர வேண்டும். இதற்காக, இங்குள்ள டாக்டர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டும். இதனால், நோயாளிகள் திருப்பூரிலேயே பரிசோதனை செய்து கொள்வதுடன், அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவரை நாடலாம்.