/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடையை சூழ்ந்த புதர் அகற்றப்படுமா?
/
நீரோடையை சூழ்ந்த புதர் அகற்றப்படுமா?
ADDED : டிச 20, 2024 10:40 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மயானம் அருகே உள்ள நீரோடை புதர் சூழ்ந்து இருப்பதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மயானம் அருகே நீரோடை உள்ளது. இந்த நீரோடையின் ஒரு பகுதியில் அதிக அளவு புதர் சூழ்ந்து உள்ளது. மற்றொரு பகுதியில் மயானதின் சுவர் உள்ளது.
மேலும், நீரோடை எதிரே டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் பெரும்பாலான மக்கள், இந்த மயான பகுதியில் அமர்ந்து மது அருந்தி விட்டு, காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், உணவு பொட்டலங்கள் என அனைத்தையும் நீரோடையில் வீசி செல்கின்றனர். இதனால் நீரோடை மாசடைகிறது. நீரோடையை சுற்றிலும் விளைநிலங்கள் இருப்பதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்த நீரோடை அருகே உள்ள புதரை அகற்றி, ரோட்டின் ஓரத்தில் தடுப்புகள் அமைப்பதுடன், 'குப்பை கொட்ட கூடாது' என்ற அறிவிப்பும் வைக்க வேண்டும்.
இதையும் மீறி இங்கு குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.