/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - பொள்ளாச்சி ரயில் மதுரைக்கு நீட்டிக்கப்படுமா?
/
கோவை - பொள்ளாச்சி ரயில் மதுரைக்கு நீட்டிக்கப்படுமா?
கோவை - பொள்ளாச்சி ரயில் மதுரைக்கு நீட்டிக்கப்படுமா?
கோவை - பொள்ளாச்சி ரயில் மதுரைக்கு நீட்டிக்கப்படுமா?
ADDED : ஆக 26, 2025 09:49 PM

கிணத்துக்கடவு; கோவை - பொள்ளாச்சி பயணியர் ரயிலை, மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
கோவை -- பொள்ளாச்சி இடையே பயணியர் ரயில் (56113) தினம்தோறும் காலை மற்றும் இரவு என இரு நேரங்களில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை, கோவையில் இருந்து அதிகாலை நேரத்தில் மதுரை வரை இயக்க வேண்டும்.
இதே ரயிலை, மாலையில் நேரத்தில் மதுரையில் இருந்து கோவை வரை இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கப்பட்டால், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வேலை மற்றும் கல்லூரிகளுக்கு செல்பவர்கள், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் செல்பவர்கள், மதுரை கோர்ட் செல்பவர்கள் பயனடைவர். இதனால் ரயில் பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
இதே போன்று, கோவை - பொள்ளாச்சி (56109) மாலை நேரத்தில் இயங்கும் பேசஞ்சர் ரயிலை, திண்டுக்கல் வரை நீட்டிப்பு செய்து, மறுநாள் காலையில் திண்டுக்கல்லில் இருந்து கிளம்பி கோவைக்கு இயக்கப்பட்டால், மக்கள் பலர் பயனடைவார்கள், என, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

