/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகர் வட்டத்தில் இன்று பணிபுரிவார்களா கேங்மேன்கள்? இரவுப் படி, இரட்டிப்பு சம்பளம் மறுக்கப்படுவதால் விரக்தி
/
மாநகர் வட்டத்தில் இன்று பணிபுரிவார்களா கேங்மேன்கள்? இரவுப் படி, இரட்டிப்பு சம்பளம் மறுக்கப்படுவதால் விரக்தி
மாநகர் வட்டத்தில் இன்று பணிபுரிவார்களா கேங்மேன்கள்? இரவுப் படி, இரட்டிப்பு சம்பளம் மறுக்கப்படுவதால் விரக்தி
மாநகர் வட்டத்தில் இன்று பணிபுரிவார்களா கேங்மேன்கள்? இரவுப் படி, இரட்டிப்பு சம்பளம் மறுக்கப்படுவதால் விரக்தி
ADDED : அக் 30, 2024 11:56 PM
கோவை; கோவை மாநகர் வட்டத்தில், துணைமின் நிலையத்தில், இரவு நேரங்களில் பணியமர்த்தப்படும் கேங்மேன்களுக்கு இரவுப் படி, பண்டிகை நாட்களில் பணிபுரியும் போது இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதால், இன்று பணிபுரிவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
'அனைத்து பணியாளர்களுக்கும் ஊர் மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும்; கள உதவியாளர் மற்றம் உள் முகத்தேர்வுக்கு கேங்மேன் பணியாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாநகர் வட்டத்தில், துணைமின் நிலையத்தில் பணியமர்த்தப்படும் கேங்மேன்களுக்கு, சில சலுகைகள் மறுக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள நிலையில், தீபாவளியான இன்று, இவர்கள் பணிபுரிவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மின்வாரியத்தில், கோவை மாநகர், வடக்கு, தெற்கு, திருப்பூர், பல்லடம், உடுமலை, நீலகிரி என ஏழு வட்டங்கள் செயல்படுகின்றன.
இதில், மாநகர் வட்டத்தில், துணை மின் நிலையத்தில் இரவு நேரத்தில் பணிபுரியும் கேங்மேன்களுக்கு இரவுப் படி, சிறப்பு விடுமுறை நாட்களில் பணிபுரியும் போது, இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
தொழிற்சங்க மாநகர் வட்ட நகரிய கோட்டத்தில் நடந்த பொதுக்குழுவில், இனி வருங்காலங்களில் பண்டிகை நேரத்தில் அவசர கால பணி மற்றும் துணைமின் நிலைய இரவு பணிக்கு செல்ல வேண்டாம் என, தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் தொழிற்சங்க தலைமை அறிவுறுத்தல் காரணமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் யுவராஜ் கூறுகையில், ''கோவை மண்டலத்தில், கோவை மாநகர் வட்டத்தில் இருக்கும், நகரிய கோட்டம், ஒண்டிப்புதுார் கோட்டம், மத்திய கோட்டத்தில், இரவுப் பணி மேற்கொள்ளும் கேங்மேன்களுக்கு இரவுப் படி, சிறப்பு விடுமுறை நாட்களில் பணிபுரியும் போது இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,'' என்றார்.
இதுகுறித்து, கோவை மாநகர் மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் கூறுகையில், ''கடந்த ஏப்.,1 முதல் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தரப்பட்டவுடன், தொகை வழங்கப்படும்,'' என்றார்.