/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிகாட்டி மைல் கல் சீரமைக்கப்படுமா?
/
வழிகாட்டி மைல் கல் சீரமைக்கப்படுமா?
ADDED : டிச 31, 2024 06:38 AM

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல இடங்களில், ரோட்டோரத்தில் நடப்பட்டுள்ள வழிகாட்டி மைல் கல் கவனிப்பாரற்று கிடக்கிறது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளது. இதில், பல இடங்களில் ரோட்டோரம் உள்ள வழிகாட்டி மைல் கல்லில் ஊர் பெயர் மற்றும் கி.மீ., அழிந்து காணப்படுகிறது. சில இடங்களில் இந்த வழிகாட்டிகள் பராமரிப்பின்றி புதர் சூழ்ந்த நிலையில் உள்ளது.
இதனால், புதிதாக கிணத்துக்கடவு பகுதிக்கு வாகனங்களில் வரும் மக்கள், இடம் மற்றும் தூரம் தெரியாமல் திணறி வருகின்றனர். சிலர் பாதி அழிந்த நிலையில் உள்ள வழிகாட்டி மைல் கல்லை கவனித்து, விசாரித்து செல்கின்றனர்.
எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில் வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, முறையான பராமரிப்பு இல்லாத வழிகாட்டி மைல் கல்லில், ஊர் பெயர் மற்றும் கி.மீ., எழுதி சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மைல் கல்லை ஆறு மாதத்துக்கு ஒரு முறை பராமரிக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.