தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதிகரிக்கும் பிளக்ஸ் பேனர்கள்: விபத்துக்கு முன் அகற்றப்படுமா?

அதிகரிக்கும் பிளக்ஸ் பேனர்கள்: விபத்துக்கு முன் அகற்றப்படுமா?

அதிகரிக்கும் பிளக்ஸ் பேனர்கள்: விபத்துக்கு முன் அகற்றப்படுமா?


UPDATED : மே 20, 2026 03:06 PM

ADDED : மே 20, 2026 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2026 03:06 PM ADDED : மே 20, 2026 02:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை நகரில் பிரதான ரோடுகளில், நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கட்சியினர் பொதுஇடங்களில் பிளக்ஸ் வைக்க முறையாக அனுமதி பெற்று, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே வைக்க வேண்டும். பிளக்ஸ் பேனர்கள் வைக்க மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதி என்ற விதிமுறைகள் உள்ளன.

வால்பாறை நகரில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், அண்ணாசிலை அருகில், போஸ்ட் ஆபீஸ் எதிரில், அரசு கலைக்கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சியினர் பிளக்ஸ் வைத்துள்ளனர். இது தவிர பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் விதிமுறையை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

தி.மு.க., அ.தி.மு.க., போன்ற திராவிட கட்சிகளின் பார்முலாவை த.வெ.க.,வும் பின் தொடர்வதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

வால்பாறை நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. இது போன்ற சூழ்நிலையில் பிளக்ஸ் பேனர்கள் ரோட்டில் சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களால், வாகன ஓட்டுநர்கள் கவனம் சிதறி விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது.

எனவே, வால்பாறை நகரில் விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களை உடனடியாக அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us