/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாக மாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?
/
நாக மாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?
நாக மாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?
நாக மாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?
ADDED : ஆக 13, 2025 09:55 PM
போத்தனூர்; கோவை, மதுக்கரையை அடுத்து திருமலையாம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட குட்டிக்கவுண்டன்பதி, இந்திரா நகரில் நூறாண்டுகள் பழமையான நாக மாரியம்மன் கோயில் உள்ளது.
வாரம்தோறும் செவ்வாய், வெள்ளியன்று பூஜையும், பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜையும் நடக்கும். சுற்றுப்பகுதிகளை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்பர். இந்நிலையில் இக்கோயிலுக்கு மின் இணைப்பு கோரி, கோயிலை பராமரித்து வரும் ஆறுமுகம், மின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
கோயில் அமைந்துள்ள இடம், அரசு புறம்போக்கு நிலம் (சாலையை ஒட்டி அமைந்துள்ளது) என்பதால், தாசில்தாரிடமிருந்து தடையின்மை சான்று பெற்று வர, மின் வாரியத்தில் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளருக்கு விபர அறிக்கை கொடுத்தார். வருவாய் ஆய்வாளர், தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், தாசில்தார் இதுவரை தடையின்மை சான்று வழங்கவில்லை. இதனால் கோயிலில் புனரமைப்பு மேற்கொண்டு, கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்ட பணியை துவங்க முடியவில்லை.
ஆறுமுகம் கூறுகையில், நுாற்றாண்டுகளுக்கு மேலான இக்கோயிலுக்கு, மின் இணைப்பு வாங்க முடியவில்லை. தாசில்தார் மனது வைத்தால், பிரச்னை முடிந்துவிடும்,'' என்றார்.
கோயிலில் இருள் நீங்க, தாசில்தார் மனது வைப்பாரா?