/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொட்டியில் வீணாகும் தண்ணீர்: ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
/
தொட்டியில் வீணாகும் தண்ணீர்: ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
தொட்டியில் வீணாகும் தண்ணீர்: ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
தொட்டியில் வீணாகும் தண்ணீர்: ஊராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
ADDED : ஜன 19, 2024 11:36 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, மாசநாயக்கன்புதுாரில் உள்ள தொட்டியில் தண்ணீர் வீணாக வெளியேறியதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாசநாயக்கன்புதுாரில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது.
இங்கு உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பும் போது, தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள குழாய் வாயிலாக அரை மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும், அருகில் உள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையாகவே உள்ளது. இந்நிலையில், ஊராட்சி பணியாளர்களின் கவனக்குறைவால் தொட்டியில் இருந்து தண்ணீர் வீணாகிறது.
இங்குள்ள குழாயில் கசியும் தண்ணீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதை ஊராட்சி நிர்வாகம் சீரமைத்து, வீணாகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.