நடைமேடை நீட்டிக்கப்படுமா? ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
நடைமேடை நீட்டிக்கப்படுமா? ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : செப் 18, 2026 04:12 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையை நீட்டிப்பு செய்ய வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி இயக்கப்படும் ரயிலின் நீளத்தை விட, நடைமேடை நீளம் குறைவாக இருப்பதால், பயணியர் ரயிலில் இருந்து இறங்க சிரமப்படுகின்றனர்.
இதனால், நடைமேடையை நீட்டிப்பு செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகள் மற்றும் ரயில் பயணியர் நலச்சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற ரயிலில், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய பயணி ஒருவர், நடைமேடையை தாண்டி ரயில் பெட்டி நின்றதால், தவறி கீழே விழுந்தார். இது குறித்து ரயில்வே ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணியர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘நடைமேடையை நீட்டிப்பு செய்ய, கடந்த, 2024ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்படுகிறது. தற்போது நடைமேடையை நீட்டிப்பு செய்ய ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான டெண்டர் அறிவித்த பின், விரைவில் நீட்டிக்கப்படும்,’ என்றனர்.
