/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றின் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்படுமா?
/
கிணற்றின் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்படுமா?
ADDED : ஜன 02, 2024 11:32 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கிணற்றின் சுற்று பகுதி புதர் மண்டி இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, 4வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கிணற்றில் இருந்து பொது குழாய் வாயிலாக, வாரம் ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்த கிணற்றின் சுற்றுப்பகுதி முழுவதும் செடிகள் அதிகளவு வளர்ந்து, புதர் போல் காட்சியளிக்கிறது. இங்கு அவ்வப்போது பாம்பு வந்து செல்வதால், போலீஸ் ஸ்டேஷன் வந்து செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், இந்த கிணற்றின் மேல் பகுதி முறையாக மூடப்படாமல் உள்ளது.
எனவே, இந்த கிணற்றின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து துாய்மையாக பராமரிக்கவும், கிணற்றுக்கு இரும்பு மூடி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.