/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்பாட்டுக்கு வருமா ஊர்ப்புற நுாலக கட்டிடம்
/
பயன்பாட்டுக்கு வருமா ஊர்ப்புற நுாலக கட்டிடம்
ADDED : மார் 29, 2025 06:26 AM

அன்னுார் : நல்லிசெட்டிபாளையத்தில் 22 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட புதிய நுாலக கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னுார் அருகே நல்லி செட்டிபாளையத்தில், 1998ம் ஆண்டு முதல் ஊர்ப்புற நுாலகம் செயல்பட்டு வருகிறது. வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள், முதியோர், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. நுாலகம் செயல்படும் கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததையடுத்து புதிய கட்டிடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மத்திய அரசு திட்டத்தில் 22 லட்சம் ரூபாய் நிதி கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது. தற்போது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாசகர்கள் கூறுகையில், 'புதிய நுாலக கட்டிடத்தில் அதிக அளவில் புத்தகங்கள் வைக்க அலமாரி பொருத்த வேண்டும். குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும்.
ஊர்ப்புற நுாலகத்தை கிளை நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும். நுாலக கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.