ADDED : செப் 04, 2025 11:02 PM

போத்தனூர்; கோவை, குனியமுத்தூரில் மாநகராட்சியின், 88வது வார்டில் திருமாங்கல்யா கார்டன் உள்ளது. இதன் இரண்டாவது குறுக்கு சாலையில், பாதாள சாக்கடை மேன்ஹோல் உள்ளது. இதில் கடந்த பல மாதங்களாக நீர் வெளியேறியது, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதனை சீரமைக்க அப்பகுதியினர் கவுன்சிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோல் சாலை, மெட்டல் கலவை போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனையும் விரைவாக சீரமைக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கவுன்சிலர் செந்தில்குமார் கூறுகையில், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறுவது குளத்து நீராகும். இதனை தவிர்க்க பிரதான சாலையில் மேன்ஹோல் அமைக்கப்படும். அதற்காக அவ்விடத்தில் விரைவில் அளவீடு பணி மேற்கொள்ளப்படும். அதுபோல் சாலை சீரமைப்பு பணி வரும் திங்கள் அன்று துவங்கும் என்றார்.