/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் நிலையானது அல்ல'
/
'விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் நிலையானது அல்ல'
'விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் நிலையானது அல்ல'
'விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் நிலையானது அல்ல'
ADDED : ஆக 11, 2025 11:11 PM

மேட்டுப்பாளையம்; 'விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் நிலையானது அல்ல,' என, சச்சிதானந்த பள்ளி செயலர் கவிதாசன் பேசினார்.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், சி.பி.எஸ்.இ., தெற்கு மண்டலம் 1, பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 35 பள்ளிகளைச் சேர்ந்த, 1000 மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது. போட்டிகளை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி செயலர் கவிதாசன் துவக்கி வைத்து பேசியதாவது:
விளையாட்டில் வெற்றி, தோல்வி இருக்கும். வெற்றியும், தோல்வியும் நிலையானது அல்ல. விளையாட்டில் கவனம் செலுத்துபவர்கள், நன்கு படிக்க மாட்டார்கள் என, பலர் தவறான எண்ணத்தை வளர்த்துள்ளனர். விளையாட்டில் வெற்றியை நோக்கி வீரர்களின் எண்ணம் இருக்கும். அதேபோன்று படிப்பிலும் அவர்கள் எண்ணம், முதலிடத்தை நோக்கி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கல்வி முதன்மையாளர் ஷீலா கிரேஸ் உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி துணை இயக்குனர் அனிதா, பயிற்சியாளர் யோகானந் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.