/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விளையாட்டில் வெற்றி தோல்வியை சமமாக ஏற்க வேண்டும்'
/
'விளையாட்டில் வெற்றி தோல்வியை சமமாக ஏற்க வேண்டும்'
'விளையாட்டில் வெற்றி தோல்வியை சமமாக ஏற்க வேண்டும்'
'விளையாட்டில் வெற்றி தோல்வியை சமமாக ஏற்க வேண்டும்'
ADDED : ஆக 13, 2025 08:46 PM

மேட்டுப்பாளையம்; விளையாட்டில் வெற்றி தோல்வியை சமமாக ஏற்க வேண்டும்'என, இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் பத்மஸ்ரீ அச்சந்தா சரத் கமல் பேசினார்.
மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 25வது ஆண்டு விளையாட்டு தினவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் தலைமை வகித்தார். தாளாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார்.
தேசிய கொடி, ஒலிம்பிக் கொடி, பள்ளியின் கொடி ஆகிய மூன்று கொடிகளை ஏற்றி வைத்த பின், விளையாட்டு அறிக்கையை மாணவர் தலைவர் மிதுன் சுரேஷ் வாசித்தார். அதைத் தொடர்ந்து நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற சிறப்பு விருந்தினர், இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் பத்மஸ்ரீ அச்சந்தா சரத் கமல், விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது:
பள்ளி பருவத்தில் தான், கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்த விளங்க முடியும். விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது அனைவரது வாழ்விலும் வருவதுண்டு.
அதனை சரிசமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எடுத்த முயற்சி வெற்றி பெறும் வரை, தொடர்ந்து கடுமையாக முயற்சியும், பயிற்சியும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அச்சந்தா சரத் கமல் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினார். அதிக வெற்றி புள்ளிகளை எடுத்த டாய்ஸ் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. மாணவி ஹாசன் நன்றி கூறினார்.