/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடிங் போட்டியில் வெற்றி எச்.சி.எல்.,ல் வேலைவாய்ப்பு
/
கோடிங் போட்டியில் வெற்றி எச்.சி.எல்.,ல் வேலைவாய்ப்பு
கோடிங் போட்டியில் வெற்றி எச்.சி.எல்.,ல் வேலைவாய்ப்பு
கோடிங் போட்டியில் வெற்றி எச்.சி.எல்.,ல் வேலைவாய்ப்பு
ADDED : மார் 29, 2025 06:14 AM

கோவை : பார்க் கல்வி குழுமத்தில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான, ' பார்க் கோட்வார் 2.0' எனும் பன்மொழி குறியீட்டு கோடிங் போட்டி, கல்லுாரிவளாகத்தில் நடந்தது. பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா தலைமை வகித்தார்.
தமிழகம் முழுவதுமுள்ள, பொறியியல் கல்லுாரிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அணிகளின் சிக்கல் தீர்க்கும் திறன்களை அடிப்படையாகக் கொண்டு, முதல் மூன்று அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
முதல் பரிசை, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி,கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி,இரண்டாம் பரிசைநா லெட்ஜ், சோனா தொழில்நுட்பக் கல்லுாரிகள்மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குழு வென்றது. மூன்றாம் பரிசை, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர் குழு வென்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, எச்.சி.எல்., டெக்னாலஜிஸின் , குழு தொழில்நுட்ப மேலாளர் இளங்கோ,முதல் மூன்று இடங்களை பிடித்த, முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு எச்.சி.எல்.,மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான உறுதி மொழியை அறிவித்தார்.