/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஐ.டி., கல்லுாரியில் 'வயர்லெஸ்' பயிற்சி
/
கே.ஐ.டி., கல்லுாரியில் 'வயர்லெஸ்' பயிற்சி
ADDED : டிச 17, 2024 11:59 PM

கோவை,; கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியின்(கே.ஐ.டி), மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை சார்பில், 'அடுத்த தலைமுறை வயர்லெஸ் அப்ளிகேஷன்ஸ்' என்ற, ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் நடந்தது.
திருவனந்தபுரம், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏவியானிக்ஸ் துறை பேராசிரியர் சின்மோய் சாஹா, திட்டத்தை துவக்கி வைத்தார்.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., அண்ணா பல்கலை, நோக்கியா, சமீர் மின்காந்தவியல் மையம், நோக்கியா, வெர்டன்ட் டெலிமெட்ரி ஆகியவற்றின் நிபுணர்களால், 5ஜி/6ஜி வயர்லெஸ் தகவல் தொடர்பு அமைப்புகளின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து, விரிவுரை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
கல்லுாரியின் துணைத் தலைவர் இந்து, தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், கல்வி மற்றும் ஆராய்ச்சி டீன் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.