தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் நவீன வசதிகளுடன் டெக் பார்க்

 கோவையில் நவீன வசதிகளுடன் டெக் பார்க்

 கோவையில் நவீன வசதிகளுடன் டெக் பார்க்


ADDED : மார் 29, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 09:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்: கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில், 'ஸ்ரீ சக்தி டெக் பார்க்' நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கோவை நீலம்பூர் பை - பாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சாதனைகளை பதிவு செய்து வருகிறது. அதில், புதிய அத்தியாயமாக அனுபவக்கற்றலும், புதுமையும், புதிய பரிணாமத்தை மாணவர்கள் பெற, 'ஸ்ரீ சக்தி டெக் பார்க் ' வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

பிரிக்கால் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், சிறுதுளி அமைப்பின் நிறுவனருமான வனிதா மோகன், டெக் பார்க்கை திறந்து வைத்து பேசுகையில், மாணவர்களை பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதில், ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது, என்றார்.

சக்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு பேசுகையில், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது டெக் பார்க். இத்தகைய சூழல் மாணவர்களை தொழில்முறை சாதனைகள் புரிய ஊக்குவிக்கும், என்றார்.

தீபன் தங்கவேலு கூறுகையில், '1 லட்சம் சதுரடியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சக்தி டெக் பார்க், கூட்டு கற்றலுக்கான மையமாக இருக்கும். ஒரே நேரத்தில், 2,500 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இங்கு, ஹாக்கத்தான், கோடிங் மாரத்தான்,பணிமனை பயிற்சிகள் மற்றும் புதுமை சவால்கள் போன்ற கல்வி நிகழ்வுகளுக்கு சிறந்த சூழலை வழங்குகிறது.

அதிவேக வை பை, லேன் இணைப்புகள், ஸ்மார்ட் டிவி, கேலரி ஸ்டைல் அரங்குகள், 250 இருக்கைகள் கொண்ட மூன்று மாநாடு நடத்தும் அரங்குகள், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, பிசிபி வடிவமைப்பு, ஆய்வகம் ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன் உள்ளிட்ட ஏழு ஆய்வகங்கள் உள்ளன,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us