/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடைக் காலம் வந்தாச்சு: கால்நடைகளை கவனிப்பது அவசியம்
/
கோடைக் காலம் வந்தாச்சு: கால்நடைகளை கவனிப்பது அவசியம்
கோடைக் காலம் வந்தாச்சு: கால்நடைகளை கவனிப்பது அவசியம்
கோடைக் காலம் வந்தாச்சு: கால்நடைகளை கவனிப்பது அவசியம்
ADDED : மார் 26, 2025 10:21 PM
சூலுார்:
கோடை வெப்பத்தை சமாளிக்க, தினமும், ஐந்து முறை கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்,என, கால்நடை பராமரிப்பு த்துறை அறிவுறுத்தி உள்ளது.
கால்நடைகளுக்கான கோடை கால பராமரிப்பு முறைகள் குறித்து, அரசு கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்கள் கூறியதாவது:
கால்நடைகளுக்கு, உயர் வெப்பத்தால் ஏற்படும் அயர்ச்சியே அவைகளின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வெப்பத்தை தாங்காத கால்நடைகள் அடிக்கடி நிழலில் தஞ்சம் புகும். அதிகமாக தண்ணீர் குடிக்கும். வேகமாக மூச்சு விடுதல், உடலில் அதிக வெப்ப நிலை, வாய் வழியாக சுவாசித்தல், அடிக்கடி கீழே விழுதல் ஆகியவை வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள் ஆகும். கோடை கால பராமரிப்பு முறைகளை முறையாக கடைபிடித்தால், வெப்ப அயர்ச்சியினால் கால்நடைகள் இறப்பதை தடுக்கலாம்.
கால்நடைகளுக்கு, ஒரு நாளைக்கு, நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தொட்டி அமைக்க வேண்டும்.
தண்ணீர் குடிக்கும் போது, கலப்பு தீவனத்தை தூவினால், மாடுகள் கூடுதலாக தண்ணீர் குடிக்கும். கொட்டகைகளில் உப்பு கட்டிகளை தொங்க விடுவதால், தண்ணீர் அதிகமாக குடிக்கும்.
நீர் தெளிப்பான் அமைப்பது, குளிர்ந்த நீரை மாடுகள் மீது தெளிப்பது, மின் விசிறி அமைப்பது ஆகியவை வெப்ப அயர்ச்சியை குறைக்கும். கூரைக்கு மேல்புறத்திலும் நீர் தெளிப்பான் அமைக்கலாம். கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்க்கலாம். மாடுகளுக்கு என தனியாக குளியல் தொட்டி அமைக்கலாம்.
இவ்வாறு, டாக்டர்கள் கூறினர்.