/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறணும்'
/
'புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறணும்'
ADDED : ஜன 04, 2024 12:30 AM
கோவை : புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முறையிட்டனர்.
கனரக வாகன ஓட்டுனர்கள், வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்படுத்தினால், 10 ஆண்டு சிறை தண்டனை; ஏழு லட்சம் ரூபாய் அபராதம் என்கிற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சட்டத்தை திரும்ப பெறக்கோரி, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில், கலெக்டரை சந்தித்து முறையிடுகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச்சங்கம், சமூக நீதி கனரக ஓட்டுனர்கள் சங்கத்தினர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலாவிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச்சங்க மாவட்ட செயலாளர் சோமு கூறுகையில், ''சட்டத்தை திரும்ப பெறவில்லை எனில், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.