/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 19 லட்சம் பறிமுதல்
/
ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 19 லட்சம் பறிமுதல்
ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 19 லட்சம் பறிமுதல்
ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 19 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 17, 2024 11:41 PM

கூடலுார்;கூடலுார் அருகே, மாநில எல்லையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள, தமிழக, கேரளா, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள, கூடலுார் பகுதியில் நேற்று முதல் சோதனை பணிகள் நடந்தது.
தேர்தல் பறக்கும் படை தாசில்தார் லதா தலைமையில், எஸ்.எஸ்.ஐ., திருகேஷ், போலீசார் மணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதியில், காலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். கேரளாவில் இருந்து கர்நாடக செல்லும் லாரியை சோதனை செய்தனர். அதில், ஓட்டுனர் அப்துல்கரீம் ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த, 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, நிலம்பூரில் இருந்து மைசூரு செல்லும் லாரியில், அபாஸ் என்பவரிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய், சுகைல் என்பவரிடமிருந்து, 80 ஆயிரம் ரூபாய் உட்பட, மொத்தம், 6 பேரிடம் மாலை வரை, 19 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, கூடலுார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.

