/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரஷ்ய கைதி மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்
/
ரஷ்ய கைதி மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்
ADDED : ஜூலை 10, 2025 10:21 PM
கோவை; போதை பொருள் பயன்படுத்திய ரஷ்ய கைதி மீதான வழக்கில், சாட்சி விசாரணை துவங்கியது.
கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியிலுள்ள ஒரு 'நைட் கிளப்பில்', போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், ஆனைமலை போலீசார் அந்த கிளப்பில் திடீர் சோதனை நடத்திய போது, கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகித்து, போதையில் டான்ஸ் ஆடி கலியாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, ரஷ்யாவை சேர்ந்த எலியன் உள்ளிட்ட 14 பேர், கடந்த 2019 ல் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். எலியன் ஜாமினில் விடுவிக்கப்பட்டாலும், அவருக்கு ஜாமின்தாரர் உத்தரவாதம் கொடுக்க யாரும் முன் வராததால், திருச்சியிலுள்ள வெளிநாட்டு கைதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், ஆறு ஆண்டுக்கு பிறகு, கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு கோர்ட்டில் (இ.சி., கோர்ட்) நீதிபதி ராஜலிங்கம் முன்னிலையில் நேற்று சாட்சி விசாரணை துவங்கியது. தொடர்ந்து அடுத்த விசாரணை, வரும் 17 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.