மாணவி பலாத்கார வழக்கில் முடிந்தது சாட்சி விசாரணை
மாணவி பலாத்கார வழக்கில் முடிந்தது சாட்சி விசாரணை
ADDED : பிப் 24, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிந்தது.
பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்தாண்டு நவ., 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சதீஷ்,30, இவரது சகோதரர் கார்த்திக்,21, குணா,20, ஆகியோரை காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடக்கிறது.
புலன்விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் லதா நேற்று சாட்சியம் அளித்தார். அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மூவரிடம் கேள்வி கேட்பதற்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
