/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநங்கை கொலை வழக்கில் சாட்சி விசாரணை 'ஓவர்'
/
திருநங்கை கொலை வழக்கில் சாட்சி விசாரணை 'ஓவர்'
ADDED : ஜூன் 27, 2025 11:13 PM
கோவை; திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில், சாட்சி விசாரணை முடிந்ததை தொடர்ந்து விரைவில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
கோவை, சாய்பாபாகாலனியில், 'டிரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தவர் திருநங்கை சங்கீதா. கோவை மாவட்ட திருநங்கை சங்க தலைவரான இவர், கடந்த 2020, அக்., 20 ல், என்.எஸ்.ஆர்., ரோட்டிலுள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு, டிரம்மிற்குள் வைத்து அடைக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.
இது தொடர்பாக, அவரது ஓட்டலில் பணியாற்றிய நாகை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்த ராஜேஷ்,23, கைது செய்யப்பட்டார். அவர் மீது, கோவை எஸ்.சி- எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. சாட்சி விசாரணை, இரு தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து, விரைவில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.