/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.37.70 லட்சம் ஹவாலா பணத்துடன் பெண் கைது
/
ரூ.37.70 லட்சம் ஹவாலா பணத்துடன் பெண் கைது
ADDED : ஜன 12, 2024 10:36 PM

பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாளையாரில், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், கலால் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி வந்த கேரள மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த சபிதா, 31, என்பவரை சோதனை செய்ததில், அவர் அணிந்திருந்த சேலையின் உள்பகுதியில் ரகசிய பாக்கெட்கள் அமைத்து, 37.70 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து இவரிடம் நடத்திய விசாரணையில், பணத்தை குன்னம்குளம் என்னும் இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து கலால் துறையினர், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்வதற்காக, பறிமுதல் செய்த பணத்துடன் வாளையார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாளையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம்கான், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.