UPDATED : அக் 13, 2026 02:32 AM
ADDED : அக் 13, 2026 02:29 AM
அ நிறம் | அளவு
வடவள்ளி: சுண்டபாளையம், கிழக்கு ரத வீதியை சேர்ந்தவர் பொன்னாத்தாள், 60; பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம், கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரம்யா, 38 என்பவர் பணம் வாங்கியிருந்தார். பொன்னாத்தாளின் வீட்டிற்கு ரம்யா சென்றார். பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், ரம்யா அருகில் இருந்த கம்பியை எடுத்து பொன்னாத்தாளின் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த பொன்னாத்தாள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், வடவள்ளி போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரம்யாவை சிறையில் அடைத்தனர்.
