கல்விச் சிறப்புடன் புதுமையை வளர்க்கும் கீதாஞ்சலி பள்ளி
கல்விச் சிறப்புடன் புதுமையை வளர்க்கும் கீதாஞ்சலி பள்ளி
UPDATED : அக் 13, 2026 03:56 PM
ADDED : அக் 13, 2026 03:54 PM

கல்வியுடன் மாணவர்களின் தனித்திறன், படைப்பாற்றல், தலைமைப் பண்பு, சமூக அக்கறை ஆகியவற்றை வளர்க்கும் வகையில் கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.
பள்ளி நிறுவனர் தலைவர் அழகிரிசாமியின் வழிகாட்டுதலில் 2012ல் தொடங்கப்பட்டது. மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,100க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தரின் கல்வித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரிய நற்பண்புகளுடன் நவீன கல்வி முறைகளையும் இணைத்து வருகிறது.
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2018 முதல் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. பிளஸ் 2விலும் 2024 முதல் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
மாணவர்களின் படைப்பாற்றல், தகவல் தொடர்புத் திறன், தலைமைப் பண்பு ஆகியவற்றை வளர்க்க இளையோர் நாடாளுமன்றம், வாசிப்பு நிகழ்ச்சிகள், கலை விழாக்கள், அறிவியல் கண்காட்சிகள், வினாடி வினா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இஸ்ரோ, விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், சாலார் ஜங் அருங்காட்சியகம், சூலுார் விமானப்படை நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கான கல்விச் சுற்றுப்பயணங்களும் மாணவர்களின் அனுபவக் கற்றலுக்கு உதவுகின்றன.
கூடைப்பந்து, எறிபந்து, கோ-கோ, ஸ்கேட்டிங், தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ஸ்டெம் கல்வி ஆகியவற்றை பாடத்திட்டத்துடன் இணைத்து மாணவர்களின் புதுமை சிந்தனை வளர்க்கப்படுகிறது.
இவ்வாறு கல்வி, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், கலை உள்ளிட்ட பல துறைகளில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.
