/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்காய் வியாபாரம் செய்வதாக பெண்ணிடம் ரூ. 51 லட்சம் மோசடி
/
தேங்காய் வியாபாரம் செய்வதாக பெண்ணிடம் ரூ. 51 லட்சம் மோசடி
தேங்காய் வியாபாரம் செய்வதாக பெண்ணிடம் ரூ. 51 லட்சம் மோசடி
தேங்காய் வியாபாரம் செய்வதாக பெண்ணிடம் ரூ. 51 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 03, 2025 12:30 AM

கோவை:
தேங்காய் வியாபாரயம் செய்வதாக கூறி, பெண்ணிடம் ரூ. 51 லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை, உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுஜா. இவர் தனது கணவருடன் இணைந்து 'பிரதா பேஷன்' என்ற பெயரில் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ரவி என்பவர் சுஜாவுக்கு அறிமுகமானார்.
அவர், பொள்ளாச்சியில் தேங்காய் வியாபாரம் செய்து வருவதாக கூறினார். பின்னர், இருவரும் சேர்ந்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தேங்காய் வாங்கி விற்பனை செய்ய முடிவெடுத்தனர். தேங்காய் இருப்பு வைக்க, ரவியிடம் இடம் உள்ளதாகவும் அங்கு தேங்காய்களை வைத்துக்கொள்ளலாம் எனவும் முடிவு செய்தனர்.
பின்னர், 2021ம் ஆண்டு ஒப்பந்தமிட்டு தேங்காய்களை வாங்க சுஜா பணம் கொடுத்தார். தேங்காய்களை ரவி இடத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்துள்ளனர்.
2022ம் ஆண்டு சுஜா தேங்காய் இருப்புகளை ஆய்வு செய்த போது, 7,87,860 தேங்காய்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2,55,660 தேங்காய்கள் மட்டுமே இருந்துள்ளன.
இது குறித்து விசாரித்த போது, தேங்காய்களை ரூ. 51.58 லட்சத்துக்கு விற்பனை செய்து, சுஜாவை ஏமாற்றியது தெரியவந்தது.
சுஜா கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியை, 42 கைது செய்து சிறையில் அடைத்தனர்.