/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் தற்கொலை; போலீசார் விசாரணை
/
பெண் தற்கொலை; போலீசார் விசாரணை
ADDED : பிப் 11, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், கீதா, 37, என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார்.
கீதா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், கோவையில் மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கணவன், மனைவியிடையே சுமூகமான உறவு இல்லாமல், அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், கீதா, தாய், தந்தை, தங்கையுடன் சண்டையிட்டு பேசாமல் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

