/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு வாங்க கொடுத்த முன்பணத்தை திருப்பித்தர மறுப்பதாக பெண் புகார்
/
வீடு வாங்க கொடுத்த முன்பணத்தை திருப்பித்தர மறுப்பதாக பெண் புகார்
வீடு வாங்க கொடுத்த முன்பணத்தை திருப்பித்தர மறுப்பதாக பெண் புகார்
வீடு வாங்க கொடுத்த முன்பணத்தை திருப்பித்தர மறுப்பதாக பெண் புகார்
ADDED : ஜூலை 06, 2025 01:54 AM
கோவை : வீடு வாங்க கொடுத்த முன்பணத்தை திருப்பி தர மறுத்து, மிரட்டும் நபரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தரகோரி, கூலி தொழிலாளி குடும்பத்தினருடன், கமிஷனரிடம் புகார் அளித்தார்.
நரசிம்மநாயக்கன் பாளையம், ராணி ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் பானுமதி, 50. இவர், நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனு:
தொப்பம்பட்டியில் உள்ள சிவா மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோரின், தொப்பம்பட்டியில் உள்ள வீட்டை ரூ.39 லட்சத்துக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. நகைகளை அடகு வைத்து, வட்டிக்கு பணம் வாங்கி ரூ.16 லட்சம் முன்பணமாக கொடுத்தேன். மீதமுள்ள ரூ.23 லட்சத்துக்கு வங்கி கடன் பெற திட்டமிட்டிருந்தேன்.
நான் வீட்டு வேலை செய்கிறேன்; கணவர் புரோட்டா மாஸ்டராக பணியாற்றுகிறார். எங்களது வருமானம் குறைவாக இருந்ததால், வங்கியில் கடன் கிடைக்கவில்லை. அதனால், வீட்டை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிவாவிடம் தெரிவித்தபோது, அவர் பணத்தை திருப்பி தர மறுத்து விட்டார். ஆள் பலத்தை வைத்து மிரட்டி வருகிறார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களால் தினசரி வாழ்க்கையை கூட நடத்த முடியாத நிலையில் உள்ளோம். அவரிடம் கொடுத்த பணத்தை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

