ADDED : மே 23, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் பணி புரிந்தபோது, விஷ பாம்பு கடித்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டியை சேர்ந்தவர் மணி, 55. இவரது மனைவி அமுதா, 50. இந்த தம்பதியினர் விவசாய கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
விவசாயப் பணிக்காக அமுதா தனி நபர் தோட்டத்துக்கு சென்றபோது, அங்கு புதரில் மறைந்திருந்த விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது.
இதனால் வலியில் அவர் சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.