ADDED : மார் 21, 2026 07:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்: நீலம்பூர் டேங்க் வீதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 55. மாத்திரை வாங்க மருந்து கடைக்கு சென்றார். பின் வீட்டுக்கு செல்ல, அவிநாசி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, கோவை நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ ஜெயலட்சுமி மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். ஜெயலட்சுமியின் மகள் அளித்த புகாரின் பேரில், நீலம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

