/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்த தடவை பூத் சிலிப்பில் 'நோ' வாக்காளர் புகைப்படம்
/
இந்த தடவை பூத் சிலிப்பில் 'நோ' வாக்காளர் புகைப்படம்
இந்த தடவை பூத் சிலிப்பில் 'நோ' வாக்காளர் புகைப்படம்
இந்த தடவை பூத் சிலிப்பில் 'நோ' வாக்காளர் புகைப்படம்
ADDED : மார் 21, 2026 07:10 PM
கோவை: கோவை மாவட்டத்தில், 27,14,676 வாக்காளர்கள் இருக்கின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளில் இருந்து, 10 நாட்களுக்கு முன்பு வரை புதிதாக வாக்காளராக இணைவதற்கும், திருத்தம் செய்வதற்கும் படிவம் கொடுக்கலாம்.
அவ்வகையில், 27ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், வாக்காளர் எண்ணிக்கை தேர்தலுக்கு முன் சிறிய அளவில் மாற்றம் ஏற்படும்.
ஏப். 23ல் ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டுப்பதிவு அலுவலருக்கு உதவும் வகையில் வாக்காளர்கள் அனைவருக்கும் பூத் சிலிப் வழங்கப்படும்.
வழக்கமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் கட்சியினர், அவர்களது சின்னத்துடன் பூத் சிலிப் வழங்குவர். அதை தவிர்த்து தேர்தல் ஆணையமே வாக்காளர் தகவல் சீட்டு என்ற பெயரில், ஓட்டுச்சாவடி பெயர், கட்டடம், பாகம் எண், வரிசை எண் குறிப்பிட்டு வழங்குகிறது.
இம்முறை வாக்காளரின் புகைப்படம் இருக்காது; பாகம் எண், வரிசை எண் மட்டும் பெரிதாக இடம் பெற்றிருக்கும். ஓட்டுப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும்.
இதை ஆவணமாக பயன்படுத்த முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆணையம் அறிவுறுத்தும் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

