/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக்கில் இருந்து விழுந்த பெண் பலி
/
பைக்கில் இருந்து விழுந்த பெண் பலி
ADDED : அக் 02, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ராமநாதபுரம், 80 அடி ரோடு, வ.உ.சி., ரோட்டில் வசித்து வந்தவர் வினோதா, 43; இவர், தனது மகன் விஜய் ஆனந்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 80 அடி ரோட்டில் சென்றபோது, பேக்கில் இருந்து மொபைல் போனை எடுக்க முயன்றார். அப்போது, கைப்பிடியை விட்டதால், எதிர்பாராதவிதமாக ரோட்டில் விழுந்தார்.
இதில், அவரது தலையில் அடிபட்டு மயங்கினார். உடனடியாக, கோவை அரசு மருத்துவமனைக்கு வினோதாவை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஏற்கனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.